எம்மைப்பற்றி..

நோக்கம்

தமிழ் இணையப் பயன்பாட்டினை மேம்படுத்தல்

பணிநோக்கு

 1. அனைத்து தமிழ் இணையத்தளங்களிலும் செயலி மென்பொருட்களிலும் ஒருங்குறியை அடிப்படையாகக்கொண்ட தமிழ் எழுத்துருக்களைப் பயன்படுத்துவதற்கான ஆதரவையும் வழிகாட்டுதல்களையும் வழங்குதலும் ஊக்குவித்தலும்.
 2. தமிழ் செயலிகளுக்கான தமிழ் மொழி இடைமுகத்தை விருத்தி செய்தல்
 3. தமிழில் கற்பதற்கும் கற்பிப்பதற்குமான தீர்வுகளை உருவாக்குதல்.
 4. தமிழ் எழுத்துப்பிழைதிருத்தி, தமிழ் இலக்கணத்திருத்தி, எழுத்துணரி போன்ற மென்பொருட்களை உருவாக்கும் செயற்பாடுகளில் ஈடுபடல்.
 5. தமிழ், சிங்களம், ஆங்கிலம் உள்ளடங்கலான மும்மொழி / பன்மொழி மொழிபெயர்ப்புக்கான தீர்வுகளை உருவாக்குதல்.
 6. தமிழ் விக்கிபீடியா வளர்ச்சிக்கு ஊக்கமளித்தல்.
 7. தமிழ் தகவல் தொழிநுட்பம் தொடர்பான மாநாடுகளை ஒழுங்குபடுத்தலும் ஆய்வுகளை ஊக்குவித்தலும்.

குறிக்கோள்கள்

அ. தமிழ் அறிதநுட்பியல் உலகாயத்தின் (தமிழறிதம்) முயற்சிகளை ஒருங்கிணைத்தல், உலக அளவில் தமிழ் இணைய உள்ளடக்கத்தின் வளர்ச்சியினை முன்னெடுத்தல், தமிழ் பண்பாடு, மொழி, கல்வி, திறன் விருத்தி போன்றவற்றின் மேம்பாட்டுக்காக – குறிப்பாக அனைத்துலக தகவல் அடிக்கட்டுமானத்தினூடாக – தகவற் தொழிநுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட தீர்வுகளை உருவாக்குவதற்கு வசதி செய்து கொடுத்தல்.

ஆ. அவ்வாறான செயற்பாடுகளை, மாநாடுகள், பட்டறைகள், ஆய்வரங்குகள், கூட்டங்கள், பணிக்குழுக்கள், நியமிக்கப்பட்ட ஆய்வுகள், கற்கைகள், ஏனைய சட்டரீதியானதும் பொருத்தமானதுமான வழிமுறைகளூடாக ஒருங்கிணைப்பதற்கான களத்தையும் பொறிமுறையினையும் வழங்குதல்.

இ. பள்ளிகள், பல்கலைக்கழகங்கள்/தொழின்முறை நிறுவனங்கள் ஆகியவற்றின் பொதுக்கல்விக்கும் நிறைவேற்றுக்குழுவால் தெரிவுசெய்யப்படும் மாணவர்களுக்கும் உதவித்தொகை, நன்கொடை, பரிசுகள், புலமைப்பரிசில்கள், நிதியுதவிகள், ஆலோசனைகள் போன்றவற்றை வழங்குதலும் பாடசாலை, வாசிகசாலைகள், நூலகங்கள்,கலாசார நிலையங்கள் போன்றவற்றின் பராமரிப்புக்கு உதவுதலும்.

பல்வேறு துறைகளிலுமான ஆய்வுகள் உள்ளிட்ட உயர் கல்விக்கும் அனைத்து வகையான கல்விச் செயற்பாடுகளதும் மேம்பாட்டுக்கும் உதவுதல்.

அண்மைய செயற்பாடுகள்

 • ஓய்வூதியர் ஆசிரியர்கள் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு “அன்றாட வாழ்வில் இணையப் பயன்பாடு” தொடர்பன 5 நாள் பயிற்சி வழங்கப்பட்டது
 • தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக அபிவிருத்தி, இந்து விவகார அமைச்சுடன், தகவற் தொழிநுட்பத்தினைப் பயன்படுத்தி தேசிய மொழிகள் கொள்கையினை நடைமுறைப்படுத்துவதற்கான கலந்துரையாடல்களிலும் ஆலோசனைகளிலும் ஈடுபட்டமை.
 • கணினியில் உள்ளூர் மொழிகளைப் பயன்படுத்துதல், தமிழ் இணையம் ஆகியவை தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்குகள் பலவற்றை ஒழுங்குபடுத்தியமை.
 • தெமட்டகொடை விபுலானந்தா கல்லூரி க.பொ.த உயர்தர மாணவர்களுக்கு தகவற்தொழிநுட்ப வகுப்புகளை ஒழுங்குபடுத்தியமை.
 • விக்கிபீடியாவுக்கு பங்களிப்பது தொடர்பான பயிற்சிப்பட்டறைகளை நூலகம் நிறுவனத்துடன் இணைந்து ஒழுங்குபடுத்தியமை